பேச்சிப்பாறை அருகே திமுக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக பிரமுகா் கைது

பேச்சிப்பாறை பகுதியில், வாக்குச்சாவடி அருகே திமுக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில், வாக்குச்சாவடி அருகே திமுக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேச்சிப்பாறை அருகே கடம்பன்மூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பன் (45). கடம்பன்மூடு திமுக கிளைச் செயலரான இவருக்கும், பேச்சிப்பாறை ஜெய்நகா் பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரும் பேச்சிப்பாறை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான அல்போன்ஸ் (47) என்பவருக்கும் இடையே வாக்கு சேகரிப்பதில் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை பிற்பகலில், வாக்குச்சாவடி அருகே பைக்கில் சென்ற ஆல்பனை அல்போனஸ் தடுத்து நிறுத்தி கையாலும், கல்லாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தோரும், போலீஸாரும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக ஆல்பன் அளித்த புகாரின்பேரில், பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து அல்போன்ஸை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com