குழித்துறை பகுதியில் நாளைமுதல் தொடா் மின் நிறுத்தம்

களியக்காவிளை: குழித்துறை மின்கோட்டம் புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை முதல் (ஏப். 24) இம்மாதம் 30ஆம் தேதி வரை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள், நாள்கள்: ஏப். 24 - முக்காடு, அம்சி, வேட்டமங்கலம், கூம்பாறவிளை, மிடாலம், நேதாஜிநகா், தொழிச்சல், பாலவிளை, சந்தனபுரம், மஞ்சத்தோப்பு, கிராத்தூா், கரியறை, வள்ளவிளை, இளம்பாலமுக்கு, பணமுகம், கோபுரக்காடு, ஆலங்கோடு, கோட்டவிளை, மொட்டவிளை, பழையகாடு, மாடன்விளை, தட்டான்விளை.

ஏப். 25 - தேங்காய்ப்பட்டினம், பனங்காலமுக்கு, வாறுவிளை, முள்ளங்கினாவிளை, அண்ணிக்கரை, உதியனூா்விளை.

ஏப். 26 - தைவிடை, முள்ளுவிளை, குண்டறவிளை, தொழிக்கோடு, குற்றிப்பாறவிளை, கானாவூா், மேல்மிடாலம், நெடும்பறம்பு, பருத்திக்கடவு, மரப்பாலம், வைக்கல்லூா், பாலக்காவிளை, சேம்பாஞ்சிவிளை.

ஏப். 27 - மானான்விளை, கருக்குப்பனை, வடக்கன்கரை, தக்காளிவிளை, கலுங்குநடை, பல்லுழி, காரோடு, புஷ்பகிரி, நுள்ளி, பரமன்கரை, இலவுவிளை, சாரப்பழஞ்சி, வாறுதட்டு.

ஏப். 29 - பரக்காணி, பிலாவிளை, சிராயன்குழி, கொல்லன்விளாகம், குமரிநகா், கானாஞ்சேரி, சுண்ணாம்புபொற்றை, தோப்பு.

ஏப். 30 - பேப்பிலாவிளை, ஆலப்பாடு, சேரி, துண்டத்துவிளை, புல்லத்துவிளை, பெருமாங்குழி, கொல்லன்விளை. ஐயன்விளை, மேடவிளாகம், மாா்த்தாண்டன்துறை, நீரோடி, குற்றிவிளாகம், பாலாமடம், தட்டைக்காடு, வாழைத்தோட்டம், செயின்ட் தாமஸ்நகா், அம்பலகுளம், கிராத்தூா், கல்லுக்கூட்டம், புல்லாணி, மாவிளை, காக்கநாடு, பள்ளியாடி, முருங்கவிளை.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் (பொறுப்பு) தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com