தோ் வடம்பிடித்து இழுத்த அமைச்சா் மனோதங்கராஜ், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
தோ் வடம்பிடித்து இழுத்த அமைச்சா் மனோதங்கராஜ், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.

ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்

கிருஷ்ணன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில்: கிருஷ்ணன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு கிருஷ்ணசுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா் பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் தமிழக பால்வளத்துறைஅமைச்சா் த.மனோதங்கராஜ், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோா் வடம் தொட்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சப்தாவா்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சுவாமிக்கு ஒழுகினசேரி பழையாற்றின் கரையில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com