இரவுபுதூா் இரவிவிநாயகா் கோயிலில் கலசத்துக்கு ஊற்றப்படும் புனித நீா்.
இரவுபுதூா் இரவிவிநாயகா் கோயிலில் கலசத்துக்கு ஊற்றப்படும் புனித நீா்.

இரவிபுதூா் விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரில் உள்ள இரவிவிநாயகா் கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரில் உள்ள இரவிவிநாயகா் கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இங்கு கோயில் நிதி ரூ. 17 லட்சம், உபயதாரா்கள் மூலம் ரூ. 20 லட்சம் ஆகியவை மதிப்பில் திருப்பணிகள் நிறைவடைந்தன. அதையடுத்து, குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அகில பாரத விஸ்வகா்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை மராமத்துப் பொறியாளா் ராஜ்குமாா், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், ஸ்ரீகாரியம் (ஓய்வு) சிவபாஸ்கரன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com