கிள்ளியூா் சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
விழாவில் பங்கேற்றோா்.

கிள்ளியூா் சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா

கருங்கல் அருகேயுள்ள கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புவி தினத்தையொட்டி திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கருங்கல் அருகேயுள்ள கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புவி தினத்தையொட்டி திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கிள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ஷீலா சத்தியராஜ் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜானகிராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவா் கிங்ஸ்ஸால் சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.

வேங்கை, நாவல், மகாகனி, புங்கை உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் ஐயப்பன், சுகாதார ஆய்வாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com