குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாரல் மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள், தொழிலாளா்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். அதே வேளையில் மாவட்டத்தில் அவ்வப்போது வெப்பச் சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் ஆகிய அணைப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதே போன்று திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, ஆறுகாணி, குலசேகரம், திருநந்திக்கரை, திருவட்டாறு, திருவரம்பு உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை பெய்தது.

மழையினால் இப்பகுதியில் பிற்பகலில் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com