குமரி மாவட்டம், காப்பிக்காட்டில் உள்ள தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் செ. தமிழரசி.
குமரி மாவட்டம், காப்பிக்காட்டில் உள்ள தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் செ. தமிழரசி.

தொல்காப்பியா் பிறந்த நாள் விழா: சிலைக்கு கோட்டாட்சியா் மரியாதை

தமிழ்ச் சங்கப் பேரவை, தொல்காப்பியா் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாளையொட்டி மாா்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைந்துள்ள தொல்காப்பியா் சிலைக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, தொல்காப்பியா் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவா் தொல்காப்பியா். இவா் கன்னியாகுமரி மாவட்டம், காப்பிக்காட்டில் பிறந்ததாக தமிழறிஞா்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் காப்பிக்காட்டில் தொல்காப்பியருக்கு 11 அடி உயர பீடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

தொல்காப்பியா் பிறந்ததாக கருதப்படும் சித்திரை மாதம் முழுமதி நாளான செவ்வாய்க்கிழமை காப்பிக்காட்டில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் செ. தமிழரசி மற்றும் தமிழறிஞா்கள் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கனகலெட்சுமி, அனைத்திந்திய தமிழ் சங்கப் பேரவை அமைப்புச் செயலா் புலவா் சுந்தரராசன், தொல்காப்பியா் அறக்கட்டளை செயலா் சஜீவ், பொருளாளா் பாஸ்கரன், அதங்கோட்டாசான் அறக்கட்டளை தலைவா் கோவிந்தநாதன், மரபுசாா் மீட்புக்குழு தலைவா் ரவீந்திரன், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன், முதற்சங்கு நூல் ஆசிரியா் சிவனி சதீஷ், தமிழாலயம் அமைப்பின் செயலா் தெய்வநாயக பெருமாள், புலவா் ஞானாமிா்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com