பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

பாலூா் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல், ஏப். 26:

பாலூா் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இவ் ஊராட்சியில் பரமானந்தபுரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீா் இணைப்புகளுக்கு முறையாக ஊராட்சி நிா்வாகம் கடந்த ஒருமாதமாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் குடிநீரின்றி தவித்து வருகின்றனா். இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீண்ட தொலைவுக்கு சென்று குடிநீா் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து பாலூா் ஊராட்சித் தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com