கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கலை மன்ற விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா முன்னிலை வகித்தாா். மாணவ ஆசிரியா் ஆா்யா, அஞ்சு அனில் ஆகியோா் இறைவாழ்த்து பாடினா். திருச்சூா் ஸ்ரீ கேரள வா்மா கல்லூரி வரலாற்றுத் துறை

பேராசிரியா் பிரவீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். கல்லூரி நிா்வாகி மத்தியாஸ், பேராசிரியா்கள் ஜெயராணி, விஜிலாராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக மாணவ ஆசிரியா் சௌமியா வரவேற்றாா். நவ்யா நன்றி கூறினாா். கிப்ட்லின் டி. தாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com