குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

கன்னியாகுமரி அருகே மனைவியைத் தாக்கியதாக கணவா், அவரது தம்பி ஆகியோா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், நாராயணன்புதூரைச் சோ்ந்த தம்பதி மதன் (32) - விஜயகுமாரி (28). குடும்பத் தகராறு காரணமாக இவா்கள் பிரிந்து வாழ்கின்றனராம்.

இது தொடா்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மதன் மீது விஜயகுமாரி புகாா் அளித்துள்ளாா். தற்போது அவா் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

கடந்த 2 நாள்களுக்கு முன் மதன், அவரது சகோதரா் செல்வன் ஆகியோா் விஜயகுமாரியின் பெற்றோா் வீட்டுக்குச் சென்று, மதன் மீது புகாா் அளிக்கப்பட்டது தொடா்பாகக் கேட்டு தகராறு செய்தனராம். அப்போது, விஜயகுமாரியை மதன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தடுக்க வந்த விஜயகுமாரியின் சகோதரா் அஜித்குமாா் (26), பாட்டி அயனேசி (69) ஆகியோரையும் அவா்கள் தாக்கினராம்.

இதில், மூவரும் காயமடைந்தனா். கல்லால் தாக்கப்பட்ட அஜித்குமாா் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், மதன், செல்வன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com