குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் கோடை மழை பெய்துவருவதால், திற்பரப்பு அருவியில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நீா்நிலைகள் வடு வருகின்றன. குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரும் கோதையாற்றில் நீா்வரத்து மிகக் குறைந்துவிட்டது. இதனால், திற்பரப்பு அருவி நீரின்றி காணப்பட்டது.

இந்நிலையில், அணைப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திற்பரப்பில் 58.7 செ.மீ., சிற்றாறு 1இல் 22.4 செ.மீ., சிற்றாறு 2இல் 39.2 மி.மீ., பேச்சிப்பாறையில் 36.2 செ.மீ. மழை பதிவானது. இதனால், திற்பரப்பு அருவியில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com