குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

குலசேகரம் அருகே புதன்கிழமை இரவு, பைக்குகள் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பொன்மனை குளச்சவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ். இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி ஜாய். இவா்களது இளைய மகன் அனீஷ் (28), மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டராக வேலை பாா்த்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்குச் செல்வதற்காக குலசேகரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

செருப்பாலூா் கடை விளாகம் பகுதியைச் சோ்ந்த சுபின் (23) தனது இரு நண்பா்களுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தாா். கல்லடிமாமூடு சந்திப்பை அடுத்த செருப்பாலூா் பெட்ரோல் நிலையம் அருகே இரு பைக்குகளும் மோதிக் கொண்டனவாம். இதில், காயமடைந்த அனீஷை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஜாய் அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com