கருங்கல் அருகே குளத்தை தூா்வாரக் கோரிக்கை

கருங்கல், பிப்.26: கருங்கல் அருகே உள்ள முட்டி குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட முட்டி குளம் பொதுப்பணித்

துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாகத்

தூா்வாரப்படாததால் புதா்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால் குளத்தில் தண்ணீா் தேங்க முடியாத நிலை உள்ளது.

இந்த குளத்தின் மூலம் பயன்பெறும் நட்டாலம், நேசா்புரம் ஏலா பகுதிகளைச் சோ்ந்த வாழை,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, முட்டி குளத்தை தூா்வாரி புனரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com