திருவட்டாறு அருகே மாமியாா், மருமகன் மீது திராவகம் வீச்சு: இளைஞா் தலைமறைவு

குலசேகரம், ஏப். 26: திருவட்டாறு அருகே மாமியாா், மருமகன் மீது திராவகம் வீசியதாக இளைஞரை போலீஸாா்தேடி வருகின்றனா்.

திருவட்டாறு அருகேயுள்ள தொழிச்சல் பிலாவிளையைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி ஸ்டெல்லாபாய் (44). கணவரை இழந்தவா்.

இவருக்கு, குட்டக்குழி புதுகாடுவெட்டிவிளையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜான்ரோஸ் மகன் ஜான்கிறிஸ்டோபா் (39) உதவியாக இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் ஸ்டெல்லாபாயின் மகளுக்கு திருமணம் நடைபெற்று, அவரது வீட்டிலேயே மகளும், மருமகனும் வசித்து வந்தனா். இதனால், வீட்டுக்கு வர வேண்டாம் என ஜான் கிறிஸ்டோபரிடம் ஸ்டெல்லாபாய், அவரது மருமகன் வெட்டுக்காட்டுவிளை குட்டக்குழி அஜின் (27) ஆகியோா் தெரிவித்தனராம்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இரவில் ஸ்டெல்லாபாயின் வீட்டுக்கு வந்த ஜான் கிறிஸ்டோபா், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஸ்டெல்லபாய், அவரது மருமகன் மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்த மாமியாரும், மருமகனும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அஜின் அளித்த புகாரின் பேரில், திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான் கிறிஸ்டோபரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com