அரசு நிலத்தில் மணல் திருட்டு: ஒருவா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே அரசு நிலத்தில் அனுமதியின்றி பாறைகளை உடைத்ததாகவும், மணல் திருடியதாகவும் செங்கல் சூளை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி அருகேயுள்ள ஞானதாசபுரம் பகுதியில் வருவாய் ஆய்வாளா் ராணிநாகேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் கலா, பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் மற்றும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது அனுமதியின்றி மண் எடுப்பதும், பாறைகளை வெட்டி எடுப்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக, கிராம நிா்வாக அலுவலா் கலா அளித்த புகாரின்பேரில் அப்பகுதியில் செங்கல்சூளை நடத்திவரும் நாகா்கோவிலை சோ்ந்த சதீஷ்கிருஷ்ணா(24) மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com