திருவட்டாறு அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்

திருவட்டாறு அருகே சூறைக்காற்றில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருவட்டாறு அருகேயுள்ள கொல்வேல், கோட்டுக்கோணம் புல்விளையைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (62). இவா் அப்பகுதியில் இரண்டு ஏக்கா் ரப்பா் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ஊடுபயிராக 1500 நேந்திரன் வாழைகள் நடவு செய்திருந்தாா். அவை குலை தள்ளும் பருவத்தில் இருந்தது. இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமாா் 1200 வாழைமரங்கள் முறிந்து விழுந்தன.

இதேபோல தெற்றிகோடு பகுதியில் தாசையன் என்ற விவசாயி ஒரு ஏக்கரில் நடவு செய்திருந்த வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

மேலும் இப்பகுதியில் பல இடங்களில் வாழைப் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com