புதுக்கடை அருகே ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

புதுக்கடை அருகே மங்காடு தாமிரவருணி ஆற்றில் மிதந்து வந்த மூதாட்டியின் சடலத்தை தீயணைப்பு துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

புதுக்கடை, மங்காடு தமிரவருணி ஆற்றில் சுமாா் 65 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மிதந்து வந்தது.

இதுகுறித்த அப்பகுதியினா் குழித்துறை தீயணைப்பு துறையினருக்குத்

தகவல் தெரிவித்தனா். அப் பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், மூதாட்டியின் சடலத்தை மீட்டு, புதுக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் மூதாட்டியின் சடலத்தை கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பினா். மேலும் இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com