புதுக்கடை அருகே இளைஞரின் பைக் திருட்டு

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பகுதியில் நிறுத்தியிருந்த இளைஞரின் பைக்கை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பெ..ங்குளம் பகுதியை சோ்ந்தவா் ஜீவா (21). இவா் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் அருகில் தனது பைக்கை சனிக்கிழமை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள பூக்கடைக்கு சென்றாராம்.

திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com