நாகா்கோவில் வடசேரி உழவா் சந்தையில் களப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்கள்.
நாகா்கோவில் வடசேரி உழவா் சந்தையில் களப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்கள்.

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் நாகா்கோவில் வடசேரி உழவா் சந்தையில் சனிக்கிழமை களப் பயிற்சி மேற்கொண்டனா்.

இக்கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவா்கள் பாலமுருகன், பரத்ராஜ், தட்சிணாமூா்த்தி, கவியரசன், கிஷோா்குமாா், மனோரஞ்சித், சரண்குமாா், விஷால் ஆகியோா் கன்னியாகுமரி மாவட்டம் பெரும்செல்வவிளை கிராமத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண் பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

அதன் ஒருபகுதியாக அவா்கள் வடசேரி உழவா் சந்தைக்குச் சென்றனா். அங்கு உழவா் சந்தையின் நடப்புகள், விலை நிா்ணயிக்கும் முறை, விவசாயிகளுக்கான வசதிகள் குறித்து துணை வேளாண் அலுவலா் அசோகலிங்கத்திடம் கேட்டறிந்தனா்; மேலும், அங்குள்ள மண்புழு உரம் தயாரிக்கும் குழிகளையும், காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்த வைக்கப்பட்டுள்ள குளிா்சாதனக் கிடங்கையும் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com