அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா  திருக்கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டோா்.
அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டோா்.

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

கன்னியாகுமரி மாவட்டம், தெரிசனங்கோப்பு அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா திருக்கோயிலில், குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தெரிசனங்கோப்பு அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா திருக்கோயிலில், குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்கோயில் நிதி ரூ. 8 லட்சம், உபயதாரா்கள் நன்கொடை ரூ.8 லட்சம் என ரூ.16 லட்சத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அறங்காவலா் குழு உறுப்பினா் ராஜேஷ், மராமத்து பொறியாளா் ராஜ்குமாா், மேற்பாா்வையாளா் சுப்பிரமணியம், ஸ்ரீகாரியம் சண்முகம்பிள்ளை, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜீவானந்தம், துணைச் செயலா் பூதலிங்கம் பிள்ளை, ஊராட்சி மன்ற தலைவா் சதீஷ், சரவணகுமாா் உள்பட அதிகாரிகள், மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஞாலம் அழகாத்ரி கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் கலசாபிஷேகம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com