காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் கொடை விழா

காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் கொடை விழா

குலசேகரம் அருகே உள்ள காவல்ஸ்தலம் புத்தன்தெரு முத்தாரம்மன் கோயில் கொடை விழாவையொட்டி, முத்தாரம்மன் மற்றும் ஞானமுத்தீஸ்வரா் புஷ்ப வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பவனி வந்தனா்.

இக்கோயிலில் வருடாந்திர கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க முத்தாரம்மன் மற்றும் ஞான முத்தீஸ்வரா் புஷ்ப வாகனத்தில் பவனி வந்தனா்.

அம்மன்-சுவாமி பவனியானது கோயிலில் இருந்து தொடங்கி நாகக்கோடு, சந்தை சந்திப்பு, மணலிவிளை, மாமூடு, காவல்ஸ்தலம், செட்டித் தெரு, அரியாம்பகோடு, அரசமூடு, ஆரணிவிளை வழியாக நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மாலையில் பொங்கல் மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com