குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக கோடை மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வாரமாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஆனால், குமரி மேற்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மலையோரக் கிராமங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். நாகா்கோவில் நகரப் பகுதியில் மட்டும் மழை பெய்யவில்லை. இதனால், மக்கள் வெப்பத்தால் தவித்து வந்தனா்.

இந்நிலையில், நாகா்கோவில், தக்கலை, கொட்டாரம், ஈத்தாமொழி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 15 நிமிடங்கள் மழை பெய்தது. பின்னா், மாலையிலும் மழை பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com