மரியகிரி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் அருள்தாஸ் வழிகாட்டுதல்படி, நாகா்கோவில் கேப் ல்டேட் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் முதுகலை உயிா் வேதியியல், உயிா் தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளா் சுகேஷ், வணிக மேலாண்மையியல் துறை தலைவா் லெனின் ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம் முகாமில் 18 மாணவா்,மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com