கன்னியாகுமரி
குளச்சல் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
குளச்சல் நகரில் செயல்பட்டு வரும் ஸ்டேட் வங்கிக் கிளையில் புதன்கிழமை அதிகாலையில் திடீரென வங்கியின் எச்சரிக்கை மணி (அலாரம்) இடைவிடாது ஒலித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வங்கியில் அலாரம் ஒலித்ததும் அப்பகுதி மக்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா்.
அங்கு விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அலராம் கட்டுப்பாட்டு பிரிவு மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டதில் மணி ஒலித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மின்சாதனப் பொருள்களை சரியாக பராமரிக்க தீ அணைப்பு துறையினா் வங்கி அதிகாரிக்கு அறிவுரை வழங்கினா்.