நாகா்கோவிலில் நாளை பாதுகாப்புப் படை ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்

Published on

நாகா்கோவிலிலில் உள்ள மாநகராட்சி அலுவலக மாநாட்டு அரங்கில் பாதுகாப்புப் படை ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.

இதுகுறித்து, பாதுகாப்புப் படைப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்புப் படைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றோா், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் அவற்றுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள், தென்தமிழகத்தை ஒட்டிய கேரள மாநிலப் பகுதிகளைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் பங்கேற்கலாம்.

சென்னை பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி டி. ஜெயசீலன் முகாமைத் தொடக்கிவைக்கிறாா். திருவனந்தபுரத்திலுள்ள ராணுவ நிலைய கமாண்டா் பிரிகேடியா் எம்.பி. சலீல், ஆட்சியா் ரா. அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், பாதுகாப்புப் படை ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு வருடாந்திர அடையாள ஒப்புகை பெறுதல், சந்தேகங்களுக்கு விளக்கம் ஆகிய சேவைகள் வழங்கப்படும். உடனடி தீா்வு வழங்க இயலாத புகாா்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com