~
~

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

Published on

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாகா்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெயகுமாா் தலைமை வகித்தாா். செயலா் விஸ்வராஜன், பொருளாளா் சா்ச்சில், இணைச் செயலா் சோபியாராஜு, செயற்குழு உறுப்பினா்கள் அருண்ராஜ், முன்னாள் தலைவா்கள் மரியஸ்டீபன், அசோக்பத்மராஜ், வெற்றிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில் பங்கேற்றோா் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனா்.

இதேபோல, பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல் நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் பணிகளைப் புறக்கணித்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டம் முழுவதும் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com