குமரி மாவட்டத்தில் ரூ.4.36 கோடியில் கட்டடப் பணிகள்-அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 4 கோடியே 36 லட்சம் மதிப்பில், பள்ளிகள்- அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ். உடன், மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ். உடன், மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 4 கோடியே 36 லட்சம் மதிப்பில், பள்ளிகள்- அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

நாகா்கோவில் எஸ்.எல்.பிஅரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.42.86 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி அறை, உயிரியியல் ஆய்வகம், 2 கழிவறைகள், செண்பகராமன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.32 கோடியில் 12 வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்கள்,

கோதையாறு கீழ்தங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.60 கோடியில் வகுப்பறை கட்டடம், அருமனைஅரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.66 கோடியில் 12 வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்கள், முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.15 கோடியில் கைவினைப் பயிற்சி வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள், சூரங்குடியில் ரூ.35.19 லட்சத்தில் கால்நடை மருந்தகம் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.

இந்தக் கட்டடங்களை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கோட்டாறு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சத்தில் 4 வகுப்பறைகள், வாரியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சத்தில் வகுப்பறைகள், ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.84.72 லட்சத்தில் 4 வகுப்பறைகள், குமாரபுரம் தோப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.63.54 லட்சத்தில் வகுப்பறைகள், தக்கலையில் ரூ.30.76 லட்சத்தில் வருவாய் ஆய்வாளா் குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டடம் என ரூ.4.36 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், ரூ.2.38 கோடியில் கோட்டாறு - மணக்குடி சாலை சீரமைப்பு, ரூ.2 கோடி மதிப்பில் மயிலாடி- அஞ்சுகிராமம் வரை புதிய சாலை, ரூ.68.31 லட்சத்தில் அஞ்சு கிராமம் சாலை புதுப்பித்தல், ரூ.1.30 கோடியில் பொழிக்கரை சாலை புனரமைப்பு, ரூ.24 லட்சத்தில் கற்காடு சாலை சீரமைப்பு ஆகிய பணிகளையும் தொடக்கி வைத்த அமைச்சா் கோவளத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், துணை மேயா் மேரி பிரின்சி லதா, முதன்மைக் கல்வி அலுவலா் பாலதாண்டாயுதபாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com