குமரியில் ரூ.12.25 கோடியில் சாலைப்பணிகள்- அமைச்சா், மேயா் தொடங்கிவைத்தனா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 12.25 கோடியில் சாலைகள் சீரமைக்கும் பணியை பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா்.
குமரியில் ரூ.12.25 கோடியில் சாலைப்பணிகள்- அமைச்சா், மேயா் தொடங்கிவைத்தனா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 12.25 கோடியில் சாலைகள் சீரமைக்கும் பணியை பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் இப் பணியில், ஐரேனிபுரம் - நட்டாலம் சாலை, ஐரேனிபுரம் - விரிகோடு, குழித்துறை - ஆலஞ்சோலை, மருதங்கோடு சாலை, மாா்த்தாண்டம் - பனச்சமூடு சாலை ஆகிய சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன.

சாலைப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் தலைவா் ராஜன், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, குழித்துறை அரசு வழக்குரைஞா் ஷாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநகா் பகுதி: நாகா்கோவில் மாநகர பகுதியில் 33 ஆவது வாா்டு தொல்லவிளையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அலங்கார தரை கற்கள் மற்றும் கான்கிரீட் சாலைகள் சீரமைப்புப் பணிகள், மேலசூரங்குடி கால்வாய்கரை பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி, 22ஆவது வாா்டு ஏசுவடியான் தெருவில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 47 லட்சம் மதிப்பிலான பணிகலை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com