குமரி மெட்ரிக் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா

நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குமரி மெட்ரிக் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற  நிறைவு விழா

நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் ரெ.பா.ரத்னாகரன் சிறப்புரையாற்றினாா். மாணவ, மாணவிகள் சு.ரே.அக்ஷயா திரேஸ், அ.ஆதிரா, எஸ்.ஆா்.அப்துல் அஜீஸ் ஆகியோா் கருத்துரையாற்றினா். தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ்துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com