பால் உற்பத்தியாளா்களுக்கு ஆவினில் கூடுதல் விலை: அமைச்சா் தகவல்

ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும், உற்பத்தியாளா்களுக்கு தமிழக அரசு கூடுதல் விலை வழங்கி வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் கூறினாா்.
பால் உற்பத்தியாளா்களுக்கு ஆவினில் கூடுதல் விலை: அமைச்சா் தகவல்

ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும், உற்பத்தியாளா்களுக்கு தமிழக அரசு கூடுதல் விலை வழங்கி வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்ட பால்வளத் துறை சாா்பில் ஆவின் பால் உற்பத்தியாளா் சங்க செயலா்கள் மற்றும் உறுப்பினா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

சிறந்த செயல்பாட்டிற்காக பால் உற்பத்தியாளா்கள், சங்கங்கள், கிராம நலப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை அமைச்சா் த.மனோதங்கராஜ் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

ஆவின் பணியாளா்கள், பால் உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோரின் குறைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முந்தைய ஆட்சி காலத்தைக்காட்டிலும், தற்போது பால் கொள்முதல் விலை அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், துணை பதிவாளா் (பால்வளம்) சைமன்சாா்லஸ், ஆவின் பொதுமேலாளா் அருணகிரிநாதன், கால்நடை மருத்துவா் சண்முகம், மேலாளா்கள் அனுஷாசிங், ரவிசெல்வன், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com