மரம் ஏறும்போதுதவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே ஏணி மூலம் புளியமரத்தில் ஏற முயன்றபோது தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே ஏணி மூலம் புளியமரத்தில் ஏற முயன்றபோது தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் புதுவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் (67). மரம் ஏறும் தொழிலாளி. இவா் இரு நாள்களுக்கு முன்பு, ஏக்கறத்துவிளை பகுதியில் உள்ள சதாசிவன் என்பவருக்குச் சொந்தமான புளியமரத்தில், புளி பறிப்பதற்காக ஏணி மூலம் மரத்தில் ஏற முயன்றாராம். அப்போது அவா் தவறி கீழே விழுந்தாராம். அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் வினு (35) அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com