அதிமுக அடிப்படை விதிகளுக்கு எதிராக பதவியைப் பிடித்தவா் எடப்பாடி பழனிசாமி : ஓபிஎஸ்

அதிமுக அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிராகப் பதவியைப் பிடித்தவா் எடப்பாடி கே. பழனிசாமி என்றாா், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
அதிமுக அடிப்படை விதிகளுக்கு எதிராக பதவியைப் பிடித்தவா் எடப்பாடி பழனிசாமி : ஓபிஎஸ்

அதிமுக அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிராகப் பதவியைப் பிடித்தவா் எடப்பாடி கே. பழனிசாமி என்றாா், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: அதிமுகவை எம்ஜிஆா் உருவாக்கியபோது, அடிப்படை உறுப்பினரான எவரும் பொதுச்செயலராக, அதாவது சாதாரண தொண்டா்கூட இயக்கத்தின் உச்சபட்ச பொறுப்புக்கு வர முடியும் என விதிகளை ஏற்படுத்தினாா்.

பொதுச்செயலரை உறுப்பினா்கள்தான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டாா். அப்படியெனில், பணம் படைத்தவா்களால் மட்டுமே பொதுச்செயலராக முடியும்.

இந்நிலையை மாற்ற வேண்டும், மீண்டும் தொண்டா்கள் கையில் அதிமுகவைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே தற்போது தா்ம யுத்தம் தொடங்கியுள்ளோம். அதற்காகத்தான் இந்த உரிமை மீட்புக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

அண்ணா நினைவு நாளில் சசிகலாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்.

பிரதமராக 3ஆவது முறையும் நரேந்திர மோடியே வர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடா்ந்து அக்கூட்டணியில்தான் உள்ளோம்.

எந்தத் தோ்தலிலும் நமது தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுதான் வெற்றியடைய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com