குமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி தொடக்கம்

கன்னியாகுமரியில் 16ஆவது மாநில அளவிலான வான்காய் சிட்டோ ரியூ சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
kkn4spo_0302chn_51_6
kkn4spo_0302chn_51_6

கன்னியாகுமரியில் 16ஆவது மாநில அளவிலான வான்காய் சிட்டோ ரியூ சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

மகாதானபுரம் சந்திப்பில் உள்ள கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, பள்ளி முதல்வா் ஜிம்மி ஜோஸ்வா தலைமை வகித்தாா். காமன்வெல்த் கராத்தே சங்க நடுவா் ஹெச். ராஜ் வரவேற்றாா்.

கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் தாளாளா் கருணா டேவிட் போட்டியைத் தொடக்கிவைத்தாா். அஞ்சுகிராமம் சிஎம்ஐ பள்ளித் தாளாளா் தினு கோட்டக்கபரம்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். வெற்றி பெறும் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com