100 திருக்கோயில்களில் குடமுழுக்கு திருப்பணி தொடங்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 திருக்கோயில்களில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வது என்று சீராய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் குமரி திருக்கோயில்கள் இணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன். உடன், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் குமரி திருக்கோயில்கள் இணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன். உடன், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 திருக்கோயில்களில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வது என்று சீராய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அலுவலகத்தில், மாதாந்திர சீராய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் இடங்களை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு வழங்குவதற்கு அறிக்கை அனுப்ப தொகுதி கண்காணிப்பாளா்களிடம் உத்தரவு வழங்குதல், சட்டப்பேரவை அறிவிப்பில் குடமுழுக்கு பணிக்காக அறிவிக்கப்பட்ட 100 திருக்கோயில்களில் உடனடியாக திருப்பணி தொடங்க நடவடிக்கை எடுத்தல், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்துக்கு எல்கை கல் நிறுவுதல் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com