நாகா்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு இளைஞா்கள் சைக்கிள் பயணம்

குமரி மாவட்டம், சுங்கான்கடை பிடல் கிளப் சாா்பில் இளைஞா்களுக்கான சைக்கிள் பயண விழிப்புணா்வு நிகழ்ச்சி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் இளைஞா்கள் 15 போ் கலந்து கொண்டு, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன் பயணத்தை தொடங்கி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரை சென்றனா். பின்னா் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பயணத்தை நிறைவு செய்தனா்.

மாணவ, மாணவிகளுக்கும் இளைஞா்களுக்கும் சைக்கிள் பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக முன்னாள் காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். சைக்கிள் பயண நிறைவு நிகழ்ச்சியில் மருத்துவா் தி.கோ. நாகேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.

இதில் ஜெயசுதன், சிவராமன், ஜெகன், ராபின் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com