மாா்த்தாண்டத்தில் மீன் வியாபாரிகள் விடிய விடிய போராட்டம்

மாா்த்தாண்டத்தில் மீன் மொத்த வியாபாரம் நடைபெறும் லாரி பேட்டையில் தற்காலிக சந்தை அமைக்க மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாலைமுதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டத்தில் மீன் மொத்த வியாபாரம் நடைபெறும் லாரி பேட்டையில் தற்காலிக சந்தை அமைக்க மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாலைமுதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மீனவ பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் 20 நாள்களில் மொத்த மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும், புதிய சந்தை பணிகள் நிறைவடைந்த பின்னா் லாரி பேட்டையில் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது என மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com