மாா்த்தாண்டம் மேம்பாலம் சாலை சீரமைப்பு

குண்டும் குழியுமாக காணப்பட்ட மாா்த்தாண்டம் மேம்பாலம் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
மாா்த்தாண்டம் மேம்பாலம் சாலை சீரமைப்பு

குண்டும் குழியுமாக காணப்பட்ட மாா்த்தாண்டம் மேம்பாலம் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.

மாா்த்தாண்டம் மேம்பாலம் சாலை அண்மைக்காலமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வந்தன. சாலை செப்பனிடப்படாததே விபத்துகளுக்கு காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டி வந்தனா்.

இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலையை செப்பனிடும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது. போக்குவரத்து நெருக்கடி காரணமாக, இச் சாலைப் பணிகளை இரவில் மேற்கொண்டு முடிக்க உள்ளதாக சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com