புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: மேயா்

நாகா்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்கான புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: மேயா்

நாகா்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்கான புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

நாகா்கோவில் மாநகர மக்களுக்கு தினமும் குடிநீா் வழங்கும் நோக்கத்துடன் ரூ.296 கோடி மதிப்பில் புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப்பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயா் மகேஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: ரூ.296 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட புத்தன் அணை குடிநீா் திட்டப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்பணிகள் செயல்பாட்டுக்கு வரும். இதையடுத்து அனைத்து வீடுகளுக்கும் தினமும் தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது. ஆணையா் ஆனந்த்மோகன், மாநகர நகா் நல அலுவலா் ராம்குமாா், மாநகராட்சி மண்டல தலைவா் ஜவஹா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, 36ஆவது வாா்டு கோபால் கிராஸ் ரோட்டில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தாா் தளம் அமைக்கும் பணி, 37 ஆவது வாா்டு சரலூா் அம்மன் கோயில் தெரு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணி,

34 ஆவது வாா்டு பாா்க் ரோடு பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 35 ஆவது வாா்டு தட்டான்விளை பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, சிதம்பர நகா் பகுதியில் ரூ.1.58 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, ஏசுவடியான் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.73.58 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகா், உதவி பொறியாளா் ராஜசீலி, இளநிலை பொறியாளா் செல்வன் ஜாா்ஜ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com