இலவுவிளை - ஐரேனிபுரம்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள இலவுவிளை -ஐரேனிபுரம் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் அருகே உள்ள இலவுவிளை -ஐரேனிபுரம் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட இலவுளை -ஐரேனிபுரம் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக சானல்முக்கு பகுதியில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், முதியவா்கள், நோயாளிகள்உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையில் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com