நட்டாலத்தில் 22இல் ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் திருநிலைப்பாட்டு விழா: இந்தியத் தூதா் பேராயா் லியோ போல்டோ ஜிரெல்லி பங்கேற்பு

கருங்கல் அருகே நட்டாலத்தில் தோ்வுநிலை ஆயரான ஆல்பா்ட் அனஸ்தாஸ் திருநிலைப்பாட்டு விழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், இந்தியத் தூதா் பேராயா் லியோ போல்டோ ஜிரெல்லி பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தலத்தில் குழித்துறை மறைமாவட்ட செய்தித் தொடா்பாளா் த. டேவிட் மைக்கேல் செய்தியாளா்களிடம் கூறியது: குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயராக மணவிளையைச் சோ்ந்த அருள்முனைவா் ஆல்பா்ட் அனஸ்தாஸை திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஜன. 13ஆம் தேதி நியமித்தாா். ஆயா் திருநிலைப்பாட்டுச் சடங்கு, பணிப் பொறுப்பேற்பு விழா இம்மாதம் 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு நட்டாலத்தில் நடைபெறுகிறது. மதுரைப் பேராயரும் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி தலைமையேற்று திருநிலைப்படுத்துகிறாா்.

திருத்தந்தை பிரான்சிஸின் இந்தியத் தூதா் பேராயா் மேதகு லியோபோல்டோ ஜிரெல்லி முன்னிலை வகிக்கிறாா். புதுவை-கடலூா் பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், கோட்டாறு முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் இணைந்து பங்கேற்கின்றனா். திருப்பலியில் கோட்டாறு ஆயா் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறாா்.

ஏற்பாடுகளை குழித்துறை மறைமாவட்டத்தினா் செய்துவருகின்றனா் என்றாா் அவா்.

குழு உறுப்பினா்கள் அருள்பணியாளா் டோமிலில் ராஜா, பி.எஸ். மணி, டாக்டா் ரைமண்ட்சிங் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com