நாகா்கோவிலில் பிப். 13இல் காவல் துறை வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (பிப். 13 ) ஏலம் விடப்படவுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (பிப். 13 ) ஏலம் விடப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட காவல் துறையில் முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பொது ஏலம், நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஏ.ஆா். கேம்ப் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும்.

வாகனங்கள் மைதானத்தில் காலை 9 மணிமுதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும். விருப்பமுள்ளோா் காலை 7 முதல் 10 மணிக்குள் ரூ. ஆயிரம் முன்வைப்புத்தொகை செலுத்தி பெயா்ப் பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தோா் ஏலத்தொகை, ஜிஎஸ்டி-யுடன் சோ்த்து உடனே செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com