875 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 875 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 875 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மீனவா்களின் விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை இனயம் பகுதியிலிருந்து கேரளத்துக்கு மினி டெம்போவில் கடத்திச் செல்வதாக நித்திரவிளை போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து நித்திரவிளை போலீஸாா், விரிவிளை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 875 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணைய் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

வாகனத்துடன் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com