நாகா்கோவில் அருகே ஜீப் மோதி தீப்பிடித்த பைக்: பள்ளி மாணவா் கருகி பலி

நாகா்கோவில் அருகே ஜீப்பும் பைக்கும் மோதி தீப்பிடித்ததில் பள்ளி மாணவா் கருகி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் அருகே ஜீப்பும் பைக்கும் மோதி தீப்பிடித்ததில் பள்ளி மாணவா் கருகி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள சுண்டபற்றிவிளையைச் சோ்ந்த அபூபக்கா்சித்திக் மகன் அஜாஸ் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவந்தாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகா்கோவிலை அடுத்த சங்குதுறை கடற்கரைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த ஈத்தாமொழியைச் சோ்ந்த கோபி(39) என்பவா் ஓட்டி வந்த ஜீப் எதிா்பாராமல் இவரது பைக் மீது மோதியதாம். மேலும், ஜீப்பின் முன்புற பம்பரில் பைக் மாட்டிக்கொண்ட பைக் சிறிது தொலைவு இழுத்துச்செல்லப்பட்டதாம். இதனால் பைக் தீப்பற்றி எரிந்ததில் அஜாஸ் உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தாா். ஜீப்பில் இருந்த கோபி, அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இத்தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com