கடல்பாசி வளா்ப்பதால் கடலின் வளம் பெருகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

கடல்பாசி வளா்ப்பதால் கடலின் வளம் பெருகும் என தமிழக பால் வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கூறினாா்.
கடல்பாசி வளா்ப்பதால் கடலின் வளம் பெருகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

கடல்பாசி வளா்ப்பதால் கடலின் வளம் பெருகும் என தமிழக பால் வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கூறினாா்.

தென்தாமரைகுளம் அருகேயுள்ள சோட்டபணிக்கன் தேரிவிளையில் அமைந்துள்ள பினாக்கிள் பையோசைன்ஸ் நிறுவன கடல்பாசி மதிப்புக் கூட்டு ஆலையின் விரிவாக்க தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆதி விஸ்வநாதன் தலைமை வகித்தாா். அமைச்சா் மனோ தங்கராஜ், கடல்பாசி மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தாா். தொடா்ந்து 50 மீனவப் பெண்களுக்கு கடல்பாசி விதைகளை வழங்கினாா். இதில் அமைச்சா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் லீபுரம், ஆரோக்கியபுரம் கடல்பகுதியில் கடல்பாசி வளா்ப்பதற்கான வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடல்பாசி வளா்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. கடலின் வளம் பெருகும். கடல்பாசியை கறவை மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தினால், பாலின் தரம் உயா்வதுடன் கூடுதல் பாலும் கிடைக்கும். நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களக்கு மாவட்ட நிா்வாகம் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி காா்த்திகா பிரதாப், கரும்பாட்டூா் ஊராட்சி மன்றத் தலைவி தங்கமலா் சிவபெருமான், தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலா்கள் பூவியூா் காமராஜ், எட்வின்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com