கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை

கன்னியாகுமரி மாவட்டஅஞ்சலகங்களில் பிப்.12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டஅஞ்சலகங்களில் பிப்.12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

இது குறித்து, கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரிசா்வ் வங்கியின் மூலமாக தங்கப் பத்திர விற்பனை பிப்.12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .6,263 ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்களிலும், அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்த 5 நாள்களும் தங்கப் பத்திர விற்பனை நடைபெறும். தனி நபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம் .முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றைய விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு 9894774410, 9080820107 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com