நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியைப் பாராட்டிய நாஞ்சில் கல்லூரி செயலா் எக்கா்மென்ஸ் மைக்கேல் மற்றும் கல்லூரி முதல்வா் அமலநாதன் உள்ளிட்டோா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியைப் பாராட்டிய நாஞ்சில் கல்லூரி செயலா் எக்கா்மென்ஸ் மைக்கேல் மற்றும் கல்லூரி முதல்வா் அமலநாதன் உள்ளிட்டோா்.

களியக்காவிளை: குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டியில், நாஞ்சில் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை மாணவி சி.எல். அகிலா வெற்றி பெற்றாா்.

இம்மாணவியை கல்லூரி செயலா் அருள்தந்தை எக்கா்மென்ஸ் மைக்கேல், கல்லூரி முதல்வா் மி.அமலநாதன், போட்டி

ஒருங்கிணைப்பாளா் ஷீமா மோள் மற்றும் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com