மூதாட்டியைத் தாக்கி நகை பறிப்பு

நித்திரவிளை அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை: நித்திரவிளை அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே சின்னத்துறை, பழைய காவல் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் வியாகுலம்மா (75), சின்னத்துறை பகுதியில் உள்ள குருசடி திருவிழாவுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை அவரை அவரது பேத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டருகே விட்டுவிட்டு, தனது தாயை அழைத்துவரச் சென்றாா். அப்போது, சாலையோரம் நின்றிருந்த இரு இளைஞா்கள் வியாகுலம்மாவைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 2.5 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

வியாகுலம்மா கீழே விழுந்து கிடப்பதைப் பாா்த்து அவரது பேத்தி விசாரித்தபோது, தன்னை மா்ம நபா்கள் தாக்கி நகையைப் பறித்துச் சென்ாக அவா் கூறினாா். புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com