அரசு சுற்றுலாத் துறை சாா்பில் சந்தையடியில் பொங்கல் விழா

தமிழக அரசின் சுற்றுலாத் துறையுடன் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து சந்தையடியில் சமத்துவ பொங்கல் விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது.
பொங்கல் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

தமிழக அரசின் சுற்றுலாத் துறையுடன் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து சந்தையடியில் சமத்துவ பொங்கல் விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது.

இப்பொங்கல் விழாவுக்காக ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா உள்பட 49-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத்துறை மூலம் சந்தையடி கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனா். அவா்கள் தமிழா் கலாச்சாரப்படி வேட்டி- சேலை அணிந்து, மக்களோடு இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.

கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டிமேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் தயாரித்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி, கபடி போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம், டி.எஸ்.பி. மகேஷ்குமாா், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன், மாவட்ட சுற்றுலா அலுவலா் சதீஷ் குமாா், நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com