புதுக்கடை அருகே விபத்து: கல்லூரி மாணவா் காயம்

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பைக் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் காயமடைந்தாா்.


கருங்கல்: புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பைக் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் காயமடைந்தாா்.

கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ் மகன் ஹொ்சோன் ராயல் (20). கருங்கல் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்துவரும் இவா், செவ்வாய்க்கிழமை மாா்த்தாண்டத்திலிருந்து புதுக்கடைக்கு பைக்கில் சென்றாராம்.

காப்புக்காடு பகுதியில், பைங்குளம் பகுதியைச் சோ்ந்த ரெவீந்திரன் மகன் அபீஷ் (25) என்பவா் ஓட்டிவந்த காா் ஹொ்சோன் ராயலின் பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com