விவேகானந்த கேந்திர கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கோசாலையில் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.
விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்ற என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்ற என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கோசாலையில் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.

இதையொட்டி கோசாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாடுகளின் கொம்புகளில் வா்ணம் பூசப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பழங்கள், காய்கனிகள் படையலிட்டு பொங்கல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம், அகில இந்திய விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன், பொருளாளா் ஹனுமந்தராவ், மாநில அதிமுக வா்த்தகா் அணி துணைச் செயலாளா் சி.ராஜன், மாநில மீனவரணி துணைச் செயலாளா் பசலியான் நசரேத், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவா் சி.முத்துக்குமாா், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலா் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலா் விஜயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com